A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி, Cool Planet Department Store இல் ATM இயந்திரத்தை நிறுவி தனது சேவைகளை விஸ்தரிப்பு செய்துள்ளது

அமானா வங்கி September 19, 2023

அமானா வங்கி தனது புதிய ATM இயந்திரத்தை, இல. 149, எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தை, நுகேகொட எனும் முகவரியில் அமைந்துள்ள Cool Planet Department Store வளாகத்தில் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது. பல அடுக்கு Department Store இல் முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்கள் மற்றும் பல்அம்ச உணவு விற்பனை பகுதி போன்றன அடங்கியுள்ளன.

புதிய ATM ஐ வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் திறந்து வைத்ததுடன், அந்நிகழ்வில், வணிக வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால், கூட்டாண்மை வங்கியியல் உதவி உப தலைவர் ரஜேந்திர ஜயசிங்க, வாடிக்கையாளர் உறவு பேண் முகாமையாளர் மஞ்சுள பீரிஸ் மற்றும் Cool Planet விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி இம்ரான் இக்பால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “நுகேகொட Cool Planet இல் ATM ஒன்றை நிறுவியுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக சொப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக பண மீளப் பெறுகைகளை மேற்கொள்வது மற்றும் கணக்கு மீதிகளை அறிந்து கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். எம்மையும் இணைத்து கொண்டமைக்கு Cool Planet நிர்வாகத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

அமானா வங்கியின் ATM நிறுவுகையை பாராட்டி Cool Planet இன் விற்பனை தலைமை அதிகாரி இம்ரான் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “நுகேகொடயிலுள்ள எமது புதிய விற்பனை நிலையத்தில் ATM ஒன்றை நிறுவியுள்ளமையானது, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கும். ATM ஒன்றை நிறுவி, எமது விற்பனை நிலையத்தை ஒரே கூரையின் கீழ் சகல வசதிகளையும் கொண்ட விற்பனை பகுதியாக திகழச் செய்கின்றமைக்கு பங்களிப்பு வழங்கிய அமானா வங்கிக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

அமானா வங்கியின் வணிக வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சுய வங்கிச்சேவை நிலையங்களின் வெற்றிகரமான செயற்பாட்டின் பிரகாரம், விற்பனை நிலையத்தினுள் முதன் முறையாக ATM ஒன்றை அமானா வங்கி நிறுவியுள்ளது. Cool Planet இன் பல சொப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்குவதாக இந்த ATM அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

இடமிருந்து - கூட்டாண்மை வங்கியியல் உதவி உப தலைவர் – ராஜேந்திர ஜயசிங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், Cool Planet விற்பனை தலைமை அதிகாரி இம்ரான் இக்பால் மற்றும் வணிக வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால்

Featured

Hajj 2025

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp