A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

ISO/IEC 27001:2013 சான்றிதழுடன் அமானா வங்கி மீள உறுதி செய்யப்பட்டுள்ளது

அமானா வங்கி August 11, 2023

தகவல் பாதுகாப்பு நியமங்களை பேணுவதற்கான அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், அமானா வங்கி மீண்டும் ISO/IEC 27001:2013 தரச் சான்றிதழை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. தகவல் பாதுகாப்பு மற்றும் பேணலுக்கான உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ISO தரச் சான்றிதழ், ஐக்கிய இராஜ்ஜிய தரப்படுத்தல் சேவையின் (UKAS), Bureau Veritas ஸ்ரீ லங்காவினால், வங்கியின் தகவல் தொழில்நுட்ப திணைக்களம் மற்றும் இடர் மீட்டல் ஆகியவற்றினால் பேணப்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு போன்றன தொடர்பான தகவல் பாதுகாப்பு நிர்வாகத்துக்காக முறையான, சுயாதீன மீளாய்வுப் பணிகளைத் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தது.

இந்த சான்றிதழைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம தகவல் பிரிவு அதிகாரி மொஹமட் கியாசுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வங்கி மீண்டும் ஒரு தடவை பெருமைக்குரிய ISO/IEC 270001:2013 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வங்கிச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையுடன், Bureau Veritas இனால் முன்னெடுக்கப்பட்ட மீளாய்வுகளினூடாக, துரித தகவல் பாதுகாப்பு செயற்பாடுகளை பேணல் மற்றும் வாடிக்கையாளர் பிரத்தியேகத்தன்மையையும், தகவல் பாதுகாப்பையும் தொடர்ந்தும் பேணுவதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சர்வதேச நியமங்களை பின்பற்றுவதனூடாக, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பை நாம் உறுதி செய்கின்றோம். குறிப்பாக, இன்றைய தொழில்நுட்பத்தியில் தங்கியுள்ள உலகில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.” என்றார்.

ISO/IEC 27001:2013 என்பது, தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புகளில் சான்றளிப்புகளை உறுதி செய்யும் நியமமாகும். சர்வதேச மட்டத்தில் தகவல் பாதுகாப்பு நிர்வாகத்துக்கான உச்ச சான்றளிப்பாகும். Bureau Veritas இனால் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டில், வங்கியின் இடர் முகாமைத்துவ கட்டமைப்புகள், தொழில்சார் செயன்முறைகள் மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், வாடிக்கையாளர்களுக்கு, பங்குதாரர்களுக்கு, ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்களுக்கு மற்றும் இதர பங்காளர்களுக்கு அமானா வங்கி வினைத்திறனான தகவல் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளமையை உறுதியளித்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வாடிக்கையாளர்களின் தகவல்கள் கிடைப்பனவு, இணைப்பு மற்றும் இரகசியத்தன்மையும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

Hajj 2025

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp