A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியின் தில்ஷாட் ஹமீட் மெர்தேகா கிண்ணம் 2023 இல் TT சம்பியன் அணியில் அங்கத்துவம் வகித்திருந்தார்

அமானா வங்கி December 18, 2023

மலேசியாவில் நடைபெற்ற மெர்தேகா கிண்ணம் 2023 டேபிள் டெனிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை வர்த்தக டேபிள் டெனிஸ் சம்மேளன அணியில் அமானா வங்கியின் ஊழியரான தில்ஷாட் ஹமீட் அங்கம் வகித்திருந்தார்.

வங்கியின் கட்டுகஸ்தோட்டை கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றும் தில்ஷாட் ஹமீட், வர்த்தக போட்டித் தொடர்களில் வங்கியின் சார்பில் பங்கேற்று, தமது திறமையை வெளிப்படுத்தி பல சம்பியன்ஷிப்களை வெற்றியீட்டியுள்ளார்.

அவரின் வினைத்திறனான செயற்பாடு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை மற்றும் அமானா வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி மெர்தேகா கிண்ணத்தில் பங்கேற்றிருந்த தில்ஷாட் எய்தியுள்ள சாதனைகள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வங்கி எனும் வகையில், வங்கியினுள் விளையாட்டு திறமைசாலிகளை ஊக்குவிப்பதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், கிரிக்கட், உதைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் மற்றும் டெனிஸ் போன்ற பல வர்த்தக விளையாட்டுச் செயற்பாடுகளில் அதன் சிறப்பை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது.” என்றார்.

இந்த சாதனை தொடர்பில் தில்ஷாட் ஹமீட் கருத்துத் தெரிவிக்கையில், “பெருமைக்குரிய மெர்தேகா கிண்ண 2023 டேபிள் டெனிஸ் போட்டித் தொடரில் இலங்கையையும், அமானா வங்கியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்ததை மிகவும் பெருமையாக கருதுகின்றேன். இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது, எமது தேசத்தின் வெற்றிகரமான செயற்பாட்டில் பங்கேற்றிருந்ததையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றேன். எனது இந்தப் பயணத்தில் அமானா வங்கியின் ஒப்பற்ற ஆதரவு மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்ததுடன், எதிர்காலத்தில் இது போன்ற மேலும் பல சாதனைகளை எய்துவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்.” என்றார்.

Featured

Hajj 2025

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp