2021 செப்டெம்பர் மாதம் முன்னெடுத்திருந்த தரப்படுத்தல் மீளாய்வின் பிரகாரம், அமானா வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலை BB+ என உறுதி செய்திருந்தது. இதனூடாக 2020 ஜுன் மாதம் முதல் உயர்வை நோக்கி மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் செயற்பாட்டு சூழல் மதிப்பாய்வின் பிரகாரம் தரப்படுத்தல் குறைக்கப்பட்டிருந்த போதிலும், அமானா வங்கியின் இந்தத் தரப்படுத்தல் நிலையானதாக உறுதி செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இது சம்பந்தமாக வெளியிடப்படட தொடர்பாடலின் பிரகாரம், அமானா வங்கியின் அகநிலை நிதி உறுதிப்பாட்டினூடாக நெறிப்படுத்தப்படுவதானது சவால்கள் நிறைந்த செயற்பாட்டு சூழல் மற்றும் அதன் சொத்தின் தரம் போன்றவற்றினூடாக அதிகளவு தாக்கம் செலுத்தப்பட்டிருந்ததாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்திருந்தது. அத்துடன், அமானா வங்கியின் தரப்படுத்தலானது, அதன் சிறிய மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் வர்த்தக நாமமானது, அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடப்பட்டிருந்ததுடன், விற்பனை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழிற்முயற்சியாளர் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவில் வெளிப்படுத்தப்படுவதனூடாக கிடைக்கும் அதிகளவு இடர் உறுதிநிலை போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கும் சிறிய நடுத்தரளவு தொழிற்முயற்சியாண்மை மற்றும் விற்பனை பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு அமானா வங்கியின் நிதியளவு பிரிவு வழிநடத்தப்படும் என்பதை ஃபிட்ச் எதிர்பார்த்துள்ளதுடன், துறையை விட நடுத்தரளவு கால அடிப்படையில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கின்றது. இதனூடாக வங்கியின் இலாபகரத் தன்மையை மேலும் ஊக்கமடையச் செய்யும் எனவும் எதிர்பார்க்கின்றது. 2021 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில், வங்கியின் வரிக்கு முன்னரான இலாபம் இரட்டிப்பாக அல்லது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 102% இனால் வளர்ச்சியடைந்து ரூ. 505.7 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப் பெறுமதி 2020 முதல் அரையாண்டு காலப்பகுதியில் 250.5 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. வங்கி அண்மையில் தனது தொடர்ச்சியான நான்காவது தடவையான ரூ. 260 மில்லியனுக்கு அதிகமான பெறுமதி வாய்ந்த நிதிக் கொடுப்பனவுக்கு நிகரான மேலதிக பங்குகள் வழங்கும் பங்கிலாப வெளியீட்டையும் அறிவித்திருந்தது. 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பங்கிலாபத்தை விட இது 30% அதிகமாகும்.
ஃபிட்ச் தரப்படுத்தலின் பிரகாரம், இலங்கையின் தேசிய தரப்படுத்தல் மற்றும் இதர நிறுவனங்களின் தரப்படுத்தலுடன் ஒப்பிடுகையில் அமானா வங்கியின் தரப்படுத்தல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், இதில் நிதிக் கோவையில் நிலைபேறான மேம்படுத்தல் பதிவாகியிருந்தமையுடன், அதன் வர்த்தக நாம உறுதிப்பாடு மேம்படுத்தப்பட்டமை போன்றன வங்கிக்கு வழங்கப்பட்ட தரப்படுத்தல் மேம்பாட்டுக்கு சாதகமானதாக அமைந்திருந்ததாக ஃபிட்ச் தெரிவித்திருந்தது.
தரப்படுத்தல் உறுதிப்பாடு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “தொற்றுப் பரவல் காரணமாக தொழிற்படு சூழல் என்பது சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், எமது நீண்ட கால தரப்படுதலான BB+ ஐ நிரந்தர புறத்தோற்றப்பாட்டுடன் ஃபிட்ச் ரேட்டிங் உறுதி செய்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அமானா வங்கியின் மீண்டெழும் திறன் மற்றும் நிலைத்திருக்கும் தன்மையை இது உறுதிப்படுத்தல் வெளிப்படுத்துவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்கொண்டிருந்த சவால்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளமையை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடுமையான இலாகா முகாமைத்துவம் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டுடன், தொழிற்துறையுடன் ஒப்பிடுகையில் தொழிற்படு முற்பணங்களை குறைத்து சிறந்த சொத்துக்கள் தரத்தை வங்கி பேணுவதையும் வெளிப்படுத்தியுள்ளது. அமானா வங்கியின் நிதிக் கோவை என்பது காலப் போக்கில் மேலும் சிறந்த நிலையை எய்தும் என்பதுடன், எமது மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளமை இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.